திருப்போரூர், செப்.28: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில் ₹21.87 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருப்போரூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோயிலில் மொத்தம் 12 உண்டியல்கள் உள்ளன. இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. எனினும், தற்போது ₹2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கியில் கால அவகாசம் முடியும் தருவாயில் உள்ளதால், கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. கோயில் செயல் அலுவலர்கள் குமரவேல், தியாகராஜன், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில் உண்டியல் காணிக்கை வருவாயாக ₹21 லட்சத்து 87 ஆயிரம் ரொக்கம், 125 கிராம் தங்கம், 2481 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக போடப்பட்டிருந்தது.
The post திருப்போரூர் கந்தசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ₹21.87 லட்சம் appeared first on Dinakaran.