×

விருதுநகர் கலெக்டர் ஆபீசில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் ஆபிசில் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா களத்தூரை சேர்ந்தவர் வினோத்குமார்(28). இவர் 2019ல் டூவீலரில் செல்லும் போது குறுக்கே நாய் வந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். இவரது காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை உரிய முறையில் செய்யாததால் நடக்க முடியாமல் சிரமத்தில் உள்ளார்.

கடந்த 4 வருடங்களாக உதவித்தொகை மற்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி பல முறை விண்ணப்பித்து உள்ளார். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் திடீரென டீசலை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த போலீசார் வினோத்குமாரை காப்பாற்றி சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

The post விருதுநகர் கலெக்டர் ஆபீசில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar collector ,Virudhunagar ,Virudhunagar district ,Thiruchuzhi ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...