×

குடிநீர் நிலைகள் இயக்குபவர்களுக்கு சுத்திகரிப்பு, குளோரினேசன் செய்தல் பற்றிய புத்தாக்க பயிற்சி

 

வெள்ளக்கோவில், செப்.27: வெள்ளக்கோவில் ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் நிலைகள் இயக்குபவர்களுக்கு குடிநீர் நிலைகள் சுத்திகரிப்பு மற்றும் குளோரினேசன் செய்தல் பற்றிய புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் நிலைகள் இயக்குபவர்களுக்கு, சுத்திகரிப்பு மற்றும் குளோரினேசன் செய்தல் பற்றிய புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட சுகாதார நல கல்வியாளர் ராஜ்குமார், மாவட்ட புகையிலை தடுப்பு சமூக சேவகர் பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் கையிருப்பு வைத்திருப்பது, அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்து விடும் பொழுதும் சரியான அளவில் குளோரின் சேர்ப்பது. 15 நாட்களுக்கு ஒரு முறை மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்றவை உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் நீரினால் பரவும் நோய்கள் காலரா, சீதபேதி, வாந்தி வயிற்று போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை கட்டுபடுத்த முடியும் மற்றும் குடிநீரினை முறையாக கையால்வதால் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை கூட கட்டுப்படுத்தலாம் என்று வட்டார மருத்துவ அலுவலர் எடுத்து கூறினார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பெரியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குடிநீர் நிலைகள் இயக்குபவர்களுக்கு சுத்திகரிப்பு, குளோரினேசன் செய்தல் பற்றிய புத்தாக்க பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Vellakoil ,Dinakaran ,
× RELATED வெள்ளக்கோவில் மார்க்கெட்டில் முருங்கை கிலோ ரூ.40க்கு விற்பனை