×

தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.3 கோடி தீபாவளி போனஸ்

 

கோவை, செப். 24: தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தேயிலை தோட்டங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்குவதற்கு தோட்ட அதிபர்களுடன், தொழிற்சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை துவங்க உள்ள நிலையில், டாடா தேயிலை தோட்ட நிறுவனம் தனது தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3 கோடியே 5 லட்சம் போனஸ் வழங்க முன்வந்துள்ளது.

அதாவது, ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும், பட்டுவாடா வரும் 26ம்தேதி துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல், உப்ரியார், கருமலை, முடீஸ், வாட்டர்பால், சோலையாறு உள்ளிட்ட 7 தேயிலை தோட்ட நிறுவனங்களும் 8.33 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க முன்வந்துள்ளன. இந்த தொகை, தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக பட்டுவாடா செய்யப்படும் எனவும் இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகையை, பண்டிகை கால முன்பணம் என தலா ரூ.3,600 வழங்கி வருகிறது. இது, போதாது, இந்த தொகையை தலா ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கான மேல்நடவடிக்கையும் துவங்கியுள்ளது.

The post தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.3 கோடி தீபாவளி போனஸ் appeared first on Dinakaran.

Tags : Govai ,Tamil Nadu ,Goa ,Nilgiris ,Theni ,Nelagiri ,Paddy ,Dinakaran ,
× RELATED கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர்...