×

மாணவிகள் உள்பட 3 பெண்கள் மாயம்

தர்மபுரி, செப்.24: கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடி காலனியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகள் ஹரிதா(17). இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை கல்லூரிக்கு சென்ற ஹரிதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், கம்பைநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர். தொப்பூர் அடுத்த தண்டுகாரம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகள் கல்பனா(17). இவர் தர்மபுரி அரசு கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்த கல்பனா திடீரென மாயமானார். இதுபற்றி அவரது தாய் சித்ரா கொடுத்த புகாரின் பேரில், தொப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போல், அரூர் கைலாயபுரத்தைச் சேர்ந்த சென்னகிருஷ்ணன் மகள் மதுநிஷா(17). இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம், கடைக்கு சென்ற மதுநிஷா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி சென்னகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மாணவிகள் உள்பட 3 பெண்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Kambainallur ,K. Anamalai ,Harita ,Eachambadi ,
× RELATED வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணி