கயத்தாறு, செப். 23: கயத்தாறு யூனியன் பகுதிகளில் ₹7 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் துவக்கிவைத்தார். கயத்தாறு யூனியன் திருமங்கலக்குறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட பெரியசாமிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ₹2 லட்சம் மதிப்பிலான தொடுதிரை கணினியை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார். இதேபோல் திருமங்கலக்குறிச்சி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று திருமங்கலக்குறிச்சி நடுத்தெருவில் ₹5 லட்சம் மதிப்பில் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கி பணியை தொடங்கி வைத்து அதற்கான அடிக்கல்லும் நாட்டினார். நிகழ்ச்சியில் திருமங்கலக்குறிச்சி பஞ். தலைவர் கருப்பசாமி, தலைமை ஆசிரியர் ஜோசப், உதவி ஆசிரியர் சாந்தி, சத்துணவு ஆசிரியர் செல்லத்துரை, பல்லங்குளம் கிளை செயலாளர் முருகன், ராஜாபுதுக்குடி பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கயத்தாறு யூனியன் பகுதிகளில் ₹7 லட்சத்தில் திட்டப் பணிகள் மாவட்ட கவுன்சிலர் துவக்கிவைத்தார் appeared first on Dinakaran.