×

நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் கொலை கோயில் கொடை விழாவில் அவதூறாக பேசியதால் கொன்றோம் கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை, செப். 22: நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே மேலச்செவலைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் விஜயகுமார் என்ற அப்பாத்துரை(58). இவர் கடந்த 16ம்தேதி ஆட்ேடாவில் சென்றபோது மேலச்செவலைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், முப்பிடாதி, மாயாண்டி, பேச்சிமுத்து ஆகிய 4பேர் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிந்தனர். அதே பகுதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோயிலில் தற்காலிக பணியாளர் கிருஷ்ணசாமி என்ற கிட்டு கொலைக்கு பதிலாக விஜயகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொலையான ஆட்டோ டிரைவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரண தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4 நாட்களாக அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் நெல்லை எஸ்பி சிலம்பரசன், சேரன்மகாதேவி தாசில்தார் விஜயா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அரசிடம் பேசி விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் விஜயகுமார் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே விஜயகுமார் கொலை வழக்கில், கிருஷ்ணசாமி என்ற கிட்டுவின் மகன்களான நவநீதகிருஷ்ணன்(25), முப்பிடாதி(20), ரஸ்தா தெற்கு தெரு மாயாண்டி(21), நடுக்கல்லூர் துர்க்கையம்மன் கோயில் தெரு பேச்சிமுத்து(20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேலச்செவலில் முப்பிடாதியம்மன் கோயில் கொடைவிழாவை நாங்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருந்தோம். அப்போது கோயிலுக்கு வந்த விஜயகுமார், நாங்கள் ஆடிப்பாடியதை கண்டித்தார். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கோயில் பூசாரியும் எங்களது தந்தையுமான கிருஷ்ணசாமி கொலையான சம்பவத்தை குறிப்பிட்டு விஜயகுமார் அவதூறாக பேசினார். இது எங்களுக்கு அவர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை சவாரிக்கு அழைப்பது போல் போனில் அழைத்து வெட்டிக் கொன்றோம் என அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

The post நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் கொலை கோயில் கொடை விழாவில் அவதூறாக பேசியதால் கொன்றோம் கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,donation ,Nellie ,Vijayakumar ,Appathurai ,Melecheval ,Munneerpallam ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...