×

சமையலர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி முகாம்

 

கோபால்பட்டி, செப். 22: சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சத்துணவு சமையல் அலுவலர்களுக்கு 3 நாட்கள் பயிர்ச்சி முகாம் மூன்று நாட்கள் நடை நடைபெற்றது.தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் சாணார்பட்டி, நத்தம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியங்களின் சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இளையராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், இளநிலை உதவியாளர் சிவகுமார், ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர் சட்டநாதன் உணவு பாதுகாப்பு குறித்தும், உதவி மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் முதலுதவி மற்றும் அதன் அவசியம் குறித்தும், உணவு ஊட்டச்சத்து நிபுணர் மகாலட்சுமி மற்றும் விஜயலட்சுமி சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும், தனலட்சுமி மன அழுத்தம் போக்கும் யோகா பயிற்சி குறித்தும், குழந்தை வளர்ச்சி, வட்டார ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தகவல் தொடர்பு திறன் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

The post சமையலர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Gopalpatti ,Chanarpatti ,Dinakaran ,
× RELATED சாணார்பட்டி அருகே ஆலய திருவிழாவில்...