×

திக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

நாகர்கோவில், செப்.21 : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145 வது பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளமடம் கிறிஸ்துநகரில் மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தினார். திராவிடர் கழக காப்பாளர் பிரான்சிஸ், திக மாவட்ட துணைச் செயலாளர் ஐசக் நியூட்டன், ஒன்றிய தலைவர்கள் ஆறுமுகம், குமாரதாஸ், மகளிர் பாசறை அமைப்பாளர் மஞ்சு குமாரதாஸ், திக மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜேஸ், அமைப்பாளர் தமிழ்மதி, கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் யுவான்ஸ், பொறுப்பாளர் ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

The post திக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Thika ,Nagercoil ,Periyar ,planting ,Kumari District ,Dravidar Kazhagam ,Dinakaran ,
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் இணைக்கப்படாத வடிகாலால் தேங்கும் மழைநீர்