×

ஊழல் வழக்கில் கைதான அமைச்சர் ஈஸ்வரனை பதவி நீக்கும் தீர்மானம்: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தோல்வி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனை பதவியில் இருந்து நீக்க கோரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சரான ஈஸ்வரன் ஊழல் பெற்றதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணை முடியும் வரை அவருக்கான மாத சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எம்பிக்கு உண்டான படித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈஸ்வரனை தற்காலிகமாக எம்பி பதவியில் இருந்து நீக்க கோரி சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தீர்மானம் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து ஆளும் மக்கள் செயல் கட்சி எம்பி இந்திராணி ராஜா ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். 2 மணி நேரம் நீடித்த விவாதத்திற்கு பிறகு அமைச்சர் ஈஸ்வரனை பதவியில் இருந்து நீக்க கோரி சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி எம்பிக்கள் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

The post ஊழல் வழக்கில் கைதான அமைச்சர் ஈஸ்வரனை பதவி நீக்கும் தீர்மானம்: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ezwarana ,Singapore Parliament ,Singapore ,Eswaran ,Parliament ,Transport ,Eswarana ,Dinakaran ,
× RELATED பதவி கேட்டு எம்எல்ஏக்கள் நெருக்கடி:...