×

சாமை டிலைட்

தேவையானவை

சாமை – 200 கிராம்
பால் – அரை கப்
கடைந்த தயிர் – ஒரு கப்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க

கடுகு மற்றும் பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

மேலே தூவ

துருவிய மாங்காய், கேரட் மற்றும் வெள்ளரி – ஒரு டேபிள் ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை

சாமையுடன் உப்பு, பெருங்காயத்தூள், பால் சேர்த்து வேக விட்டு ஆறியதும் தயிர், வெண்ணெய் சேர்க்கவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து, மேலே மாங்காய், கேரட், வெள்ளரி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

The post சாமை டிலைட் appeared first on Dinakaran.

Tags : Samai Delight ,Samai ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!