×

அதிமுக மாஜிக்கள் வசூலில் பழக்கப்பட்டவர்கள்: திருடனுக்கு தேள் கொட்டத்தான் செய்யும்…

* அண்ணாமலை காட்டமான பதிலடி

கோவையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நல்ல போலீஸ்காரங்கள பார்த்தா திருடனுக்கு தேள் கொட்டின மாதிரிதான் இருக்கும். அனைத்து காவலர்களையும் திருடன் என சொல்லியதாக கேள்விப்பட்டேன். ஆனால், நான் தரத்தை தாழ்த்தி அவதூறான கருத்தை முன்வைக்க மாட்டேன். என்னுடைய கடமை பாஜவை தமிழகத்தில் வளர்க்க வேண்டும். இன்னொரு கட்சியை தாழ்த்திதான் பாஜ வளர வேண்டும் என்பதில்லை. இதற்கு முன்பு தமிழகத்தில் (அதிமுக மாஜி அமைச்சர்கள்) மந்திரிகளாக இருந்து வசூல் செய்து பழக்கப்பட்டவர்கள், அனைத்தையும் வசூலாக பார்க்கிறார்கள். அவர்கள் வசூல் செய்துதான் பழக்கம். மந்திரிகளாக இருந்ததே வசூலுக்காகத்தான். அதனால்தான் நானும் நடைபயணம் செய்தால் அவர்களுக்கு வசூல் செய்வதாக தோன்றுகிறது. ஏனென்றால் அந்த டிஎன்ஏவை மாற்ற முடியாது. வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ அவர்களுக்கு நேர்மை என்பதின் அர்த்தம் ெதரியாது. அதனால் அந்த வார்த்தைக்கெல்லாம் பதில் கூறக்கூடாது.

அண்ணா குறித்து நாளிதழ்கள் பதிவு செய்துள்ளதைத்தான் நான் பதிவு செய்தேன். நூலகத்தில் எடுத்து பார்க்கலாம். 2 ஆண்டுகளில் நான் சொன்ன ஒரு டேட்டாவை தவறு என்று சொல்லுங்கள் பார்க்கலாம். அண்ணாதுரையை நான் தவறாக சொல்லவில்லை. யாருடைய அடிமையும் கிடையாது. எங்களுக்கும் யாரும் அடிமை கிடையாது. இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் என்னிடம் வேலைக்கு ஆகாது. நானும் மரியாதை கொடுத்து பழகுபவன். நானும் மரியாதை கொடுத்து அரசியல் செய்பவன். எனக்கும் கடும் சொற்கள் வரும். சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேலே ஒரு மாதிரி பேசுவாரு, சாயந்திரம் 6 மணிக்கு முன்னாடி ஒரு மாதிரி பேசுவாரு. அதை நான் சொல்ல விரும்பவில்லை. 10 ஆண்டுகள் காவல் துறையில் துப்பாக்கி பிடித்த கை இது. அதனால் நேர்மையை பற்றி சி.வி. சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக்கூடாது. அவர் மந்திரியாக இருந்தபோது என்ன செய்தார்? என்பது எனக்கு தெரியும். அதற்குள் நான் போக விரும்பவில்லை. என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன். இது என் தன்மான பிரச்னை. அப்படியே ஒட்டி கூனி குனிந்து அப்படி அடிபணிந்து போக வேண்டியது எனக்கும், பாஜவுக்கும், தொண்டனுக்கும் கிடையாது. இது சுயமரியாதை இருக்கும் கட்சி. யாருடைய காலிலும் விழுபவர்கள் இந்த கட்சியில் இல்லை. கூட்டணி முக்கியம், அதிமுக சொல்வதை ஏற்றுக்கொண்டால் இரு கட்சிகளையும் இணைத்து விடலாமே? கூட்டணியில் இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். அடிமையாக இருக்க முடியாது. கூனி கும்பிட்டு அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. பாஜ 2026ல் தனித்து வரும். பீ டீம், சி டீமாக வர மாட்டோம்.

யாரையும் ஒருமையில் பேச மாட்டேன். சிறுவர்களை தூண்டிவிட்டு நீங்கள் சொல்லுங்கள் என்று சொல்ல மாட்டேன். மற்றவர்களை ஏவி பதில் சொல்பவன் நான் அல்ல. அது எப்படி, இந்த 3 பேர் மட்டும் பேசுவார்கள். மாற்றி மாற்றி இந்த 3 பேர்தான் பேசுவார்கள். தன்மான மிக்க தலைவனாக உள்ளேன். இங்கும் லஞ்ச ஒழிப்பு துறை உள்ளது. பாதுகாப்பு அனைவருக்கும் தேவை. தனி மரம் எப்போதும் தோப்பாக முடியாது. கூட்டணி வேண்டாம் என சொல்லும் தமிழகத்தில் அப்படிப்பட்ட பலசாலிகளை பார்க்கவில்லை. தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேலே ஒரு மாதிரி பேசுவாரு, சாயந்திரம் 6 மணிக்கு முன்னாடி ஒரு மாதிரி பேசுவாரு. அதை நான் சொல்ல விரும்பவில்லை. 10 ஆண்டுகள் காவல் துறையில் துப்பாக்கி பிடித்த கை இது. அதனால் நேர்மையை பற்றி சி.வி. சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக்கூடாது.

The post அதிமுக மாஜிக்கள் வசூலில் பழக்கப்பட்டவர்கள்: திருடனுக்கு தேள் கொட்டத்தான் செய்யும்… appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Scorpions ,Annamalai Kattamana ,BJP ,State President ,Annamalai ,Coimbatore ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...