×

‘யஷோ பூமி’ சர்வதேச மையம் திறப்பு: கைவினைஞர்களுடன் மோடி கலந்துரையாடல்

புதுடெல்லி: ெடல்லியில் ‘யஷோ பூமி’ என்ற பெயரில் கட்டப்பட்ட சர்வதேச மையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து கைவினைஞர்களுடன் மோடி கலந்துரையாடினார். தலைநகர் டெல்லியின் துவாரகா பகுதியில் ‘யஷோ பூமி’ என்ற பெயரில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (ஐஐசிசி) கட்டப்பட்டது. உலகத்தரத்தில் கட்டப்பட்ட இந்த மையத்தில் 15 மாநாட்டு மையங்கள், 11 ஆயிரம் பேர் அமரும் வகையிலான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி, இன்று விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு புதியதாக கட்டப்பட்ட இந்த மாநாட்டு மையத்தை (பகுதி: 1) நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் லைனை, துவாரகா செக்டார்-21ல் இருந்து துவாரகா செக்டார்-25 வரை நீட்டிக்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தவுலா குவானில் இருந்து துவாரகா செக்டார் 25 வரை சென்ற மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அப்போது மெட்ரோவில் பயணித்த பயணிகளுடன் மோடி உரையாடினார். அவர்கள் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் மோடி கலந்துரையாடி, அவர்களுக்கு நன்றி கூறினார். அதன்பின் ‘யஷோ பூமி’ சென்றடைந்த பிரதமர் மோடி, காலணித் தொழிலில் ஈடுபடும் கைவினைஞர்கள், களிமண் சிற்பம் செய்யும் குயவர்களைச் சந்தித்து, அவர்களின் கலைத்திறன்களை கேட்டறிந்தார். அவர்களுக்கான ஒன்றிய அரசின் நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்து அவர்களுடன் உரையாடினார்.

The post ‘யஷோ பூமி’ சர்வதேச மையம் திறப்பு: கைவினைஞர்களுடன் மோடி கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Tags : Yasho Bhoomi ,International Centre Opening ,Modi ,Artisans ,New Delhi ,PM Modi ,Delhi ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…