×

காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்க உள்ளோம் :திருச்சி எம்.பி.சிவா

சென்னை : காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்க உள்ளோம் என்று திருச்சி எம்.பி.சிவா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திருச்சி சிவா எம்.பி.பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், “எந்த விருப்பு வெறுப்புமின்றி பாஜக, அதிமுக உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன தமிழக பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.காவிரி நீரை, கர்நாடகத்திடம் இருந்து பெற உரிய முயற்சியை எடுப்போம்,”என்றார்.

The post காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்க உள்ளோம் :திருச்சி எம்.பி.சிவா appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Jalsakti ,Minister ,Trichy ,GP ,Siva ,Chennai ,MS ,Trichy M. GP ,Shiva ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...