×

டிசம்பர் மாதம் நடைபெறும் திருப்பதி நித்ய சேவைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு விவரம் வௌியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட நித்ய சேவைகளுக்கான குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் டிக்கெட்களுக்கு இந்த மாதம் 18ம் தேதி காலை 10 மணி முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யப்படும். கோயிலுக்குள் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு 21ம் தேதி காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சேவையில் பங்கேற்காமல் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் செல்ல அன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல் டிசம்பர் மாதம் வேண்டுதலின்படி கோயிலுக்குள் அங்கபிரதட்சனம் செய்வதற்கு 23ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் .

The post டிசம்பர் மாதம் நடைபெறும் திருப்பதி நித்ய சேவைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு விவரம் வௌியீடு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Seven Malayan Temple ,Suprapadam ,Archanai ,
× RELATED 20 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்