×

திருப்பதியில் பேட்டரியால் இயங்கும் இரட்டை பேருந்து அறிமுகம்: வரவேற்பை பொறுத்து சேவையை அதிகரிக்க திட்டம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக இரட்டை அடுக்கு பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக டபுள் டக்கர் பேருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் திருப்பதியில் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக நகராட்சி சார்பில் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் டபுள் டக்கர் பேருந்து ஒன்று வாங்கப்பட்டுள்ளது. ஹைதராபத்தில் இருந்து வாங்கப்பட்ட இப்பேருந்தை, திருப்பதி நகர துணை மேயர் வரவேற்றார்.

இதனை தொடர்ந்து திருப்பதியில் உள்ள கங்கை அம்மன் கோயிலில், மின்சார டபுள் டக்கர் பேருந்துக்கு பூஜைகள் செய்யப்பட்டன. முதற்கட்டமாக, திருப்பதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இந்த பேருந்தை இயக்க முடிவு செய்திருப்பதாக துணை மேயர் தெரிவித்தார். இப்பேருந்தின் வெற்றியை பொறுத்து, மேலும் சில பேருந்துகளை இயக்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.

The post திருப்பதியில் பேட்டரியால் இயங்கும் இரட்டை பேருந்து அறிமுகம்: வரவேற்பை பொறுத்து சேவையை அதிகரிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirapathi ,Tirupati ,Tirupati Ethumalayan Temple ,Sami ,Tirapati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!