×

முத்துலாடம்பட்டியில் குழந்தைகள் நல மையமாக மாறிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி

கரூர், செப்.15: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்துலாடம்பட்டி பகுதியில் பழைய தண்ணீர் தொட்டியில் செயல்படும் குழந்தைகள் நல மையத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. சில பகுதிகளில் செயல்படும் மையங்கள் வாடகை கட்டிடத்திலும், சில பகுதிகளில் சொந்த கட்டிடத்திலும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தது 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்று வருகின்றன. இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை முத்துலாடம்பட்டியில் முன்னாள் அமைச்சர் கக்கன் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குழந்தைகள் நல மையம் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் நல மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பை தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி உள்ளனர்.

கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஏற்கெனவே திமுக ஆட்சியில் அமைத்தது போல்
சீத்த முட்செடிகள் வெட்ட வெட்ட வளர்ந்து நிலத்தடி நீர் மட்டத்தை பாதிப்பது போல, இந்த வகை செடிகளும் திரும்ப திரும்ப வளர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மனிதர்களுக்கு சரும நோய்களான சொறி, சருமவழல், ஆஸ்த்துமா போன்றவற்றையும் உண்டாக்கும் வல்லமை கொண்டது. ஆபத்தான செடி வகைகளில் இதுவும் ஒன்று.

The post முத்துலாடம்பட்டியில் குழந்தைகள் நல மையமாக மாறிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி appeared first on Dinakaran.

Tags : Muthuladampatti ,Karur ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED கரூர் ரயில்வே நிலைய சாலை பகுதியில்...