×

கோயம்பேடு மார்க்கெட்டில் 400 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக அங்காடி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக அலுவலர் சாந்தி மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் உஷா தலைமையில் அதிகாரிகள் நேற்று 2000க்கும் மேற்பட்ட கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட சுமார் 400 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.15,000 அபராதம் விதித்தனர். பின்னர் இனிமேல் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்வது கண்டுபிடித்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் 400 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Annanagar ,Koyambedu ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு