×

நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ராஜபாளையம், செப்.14: ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ராஜபாளையம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கால்நடை பராமரிப்புத்துறை தோட்டக்கலை துறை கூட்டுறவு துறை உட்பட அரசின் பல்வேறு துறைகளில் இருந்து 325 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விபத்து நிவாரணம், இணையவழியில் பிற்படுத்தப்பட்டோர் பட்டா வழங்குதல், இலவச வீட்டு மனை பட்டா, இறப்பு சான்று நகல், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குதல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவின் முன்னதாக கலெக்டர் ஜெயசீலன் மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், சிவகாசி வட்டார கோட்டாட்சியர், வனத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
முகாமில் பயனாளிகள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாம் இறுதியில் கலெக்டர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

The post நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Relations ,Project ,Camp ,Nallamanayakanpatti Village ,Rajapalayam ,Public Relations ,Nallamanayakanpatti ,
× RELATED கலிக்கநாயக்கன்பாளையத்தில் ஜூன் 12ம்...