×

குறிஞ்சிப்பாடி அருகே பள்ளி மாணவியை கடத்தி காதலிக்க வற்புறுத்தல்

குறிஞ்சிப்பாடி, செப். 14: குறிஞ்சிப்பாடி அருகே பள்ளி மாணவியை கடத்தி வீட்டில் அடைத்து வைத்து காதலிக்க வற்புறுத்திய இளைஞர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது பள்ளி மாணவி. இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற போது அதே ஊரை சேர்ந்த சிவகுமார் மகன் மனோஜ் குமார்(25), அவரது நண்பர்கள் தயாளன் மகன் வடிவேலன்(19), செந்தில் மகன் சுரேஷ்(21) ஆகியோர் மாணவியின் வாயில் துணியை வைத்து கடத்தி சென்று அருகில் இருந்த சக்திவேல் என்பவரின் புதியதாக கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீட்டில் அடைத்து வைத்து, மனோஜ்குமாரை காதலிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.

நள்ளிரவு வரை மாணவி வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் தேடுவதை அறிந்த மனோஜ்குமார், அவரது நண்பர்கள் வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து மாணவியின் தந்தை, குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மனோஜ் குமார், அவரது நண்பர்கள் வடிவேலன், சுரேஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குறிஞ்சிப்பாடி அருகே பள்ளி மாணவியை கடத்தி காதலிக்க வற்புறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kurinchipadi ,
× RELATED என்எல்சி சார்பில் கட்டப்பட்டது அரசு...