×

கட்டிட மேஸ்திரியிடம் நகை, பணம் அபேஸ்

ஜலகண்டாபுரம், செப்.13: ஜலகண்டாபுரத்தை அடுத்த தோரமங்கலம் கிராமம், காப்பரத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் செல்வராஜ்(29). கட்டிட மேஸ்திரி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று முன்தினம், தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர், செல்வராஜூக்கு திருமண தோஷம் இருப்பதாகவும், தோஷம் கழித்தால் திருமணம் கைகூடும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். தோஷம் கழிக்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறிய அவர், வீட்டில் இருக்கும் நகை மற்றும் ₹2000 பணத்தை பூஜையில் வைக்க வேண்டும் எனக்கூறினார்.

அதன்படி, செல்வராஜ் பூஜையில் வைத்த 2 பவுன் செயின் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தான் வந்த டூவீலரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மாயமானார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த செல்வராஜ், இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிட மேஸ்திரியிடம் நகை, பணம் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Jalagandapuram ,Palaniswami ,Selvaraj ,Kapparathampatti, Thoramangalam village ,
× RELATED குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட...