×

மின்கம்பியில் மோதிய மரக்கிளைகள் அகற்றம்

 

வத்தலக்குண்டு, செப். 12: வத்தலக்குண்டுவில் மின் கம்பியில் மோதிய மரக்கிளைகள் கிரேன் உதவியுடன் முழுமையாக அகற்றப்பட்டது. வத்தலக்குண்டுவில் உள்ள திண்டுக்கல் சாலையில் வெங்கிட்டாபட்டியையொட்டி அருள்மிகு பால விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகே உள்ள அரச மரத்தின் கிளைகள் மிக உயரமாக வளர்ந்துள்ளன. இதனால் அவை அந்த பகுதியில் செல்லும் உயரழுத்த மின் கம்பிகளில் உரசியபடி இருந்தது.

இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மின் கம்பியில் உரசிய கிளைகளை கிரேன் கட்டிங் மெஷின் மூலம் நேற்று முழுமையாக அகற்றினர். இதனை பொதுமக்கள் வரவேற்றனர்.

The post மின்கம்பியில் மோதிய மரக்கிளைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Vathalakundu ,Wattalakundu ,Vatthalakundu ,Dinakaran ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்