×

வீடியோவில் ‘லைவ்’ காண்பித்து கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை

பொள்ளாச்சி: மொபைல் வீடியோவில் ‘லைவ்’ காண்பித்து தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பொன்னாச்சியூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (28). தனியார் பஸ் கண்டக்டர். குடிப்பழக்கமுடைய இவர், அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதாக, சிலரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில், வீட்டின் விட்டத்தில் சேலையால், தூக்கு போடுவதை தனது செல்போனில் பதிவு செய்து, ‘லைவ்’வாக நண்பர்களுக்கு காண்பித்துள்ளார்.

பின்னர், சிறிது நேரத்தில், சண்முக சுந்தரம் தூக்கில் தொங்கியதையும் வீடியோ பதிவு கட்டாகியுள்ளது. இதையறிந்த வீட்டில் இருந்தவர்கள், அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post வீடியோவில் ‘லைவ்’ காண்பித்து கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Ponnachiur ,Pollachi, Coimbatore ,Dinakaran ,
× RELATED போகி பண்டிகை கொண்டாட்டத்தால்...