×

சென்னையில் சாலை அமைக்க கோரப்பட்ட டெண்டரை நிராகரித்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: சென்னையில் சாலை அமைக்க கோரப்பட்ட டெண்டரை நிராகரித்ததை எதிர்த்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னையில் சாலை அமைக்க மாநகராட்சியின் பேருந்து வழித்தட சாலைகள் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் கோரிய டி.எஸ்.ஆர். என்ற நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. முத்துசாமி பாலத்திலிருந்து 40 கி.மீ. தூரத்துக்கு அப்பால் தார் கலவை ஆலை அமைந்துள்ளதாக கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.எஸ்.ஆர். நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

The post சென்னையில் சாலை அமைக்க கோரப்பட்ட டெண்டரை நிராகரித்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : iCort ,Chennai ,Icourt ,Dinakaran ,
× RELATED உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டி கொண்டு வரலாமா?: ஐகோர்ட் கேள்வி