×

பெரம்பலூர், வேப்பந்தட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம்

பெரம்பலூர்,செப்.8: ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பெரம்பலூர், வேப்பந்தட்டை பகுதிகளில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 129 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் மலிந்து கிடக்கும் ஊழலை கண்டித்து பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய இடங்களில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதன்படி பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் பாங்க் முன்பு, காலை 10 மணி அளவில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சாமி நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, கலையரசி, அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழுவை சேர்ந்த கருணாநிதி, சிவானந்தம், கிருஷ்ணசாமி, ரெங்கராஜ், வசந்தா, சரவணன், பன்னீர்செல்வம் மற்றும் நகர் குழு, ஒன்றிய குழு, மின்னரங்க குழுவினர் என 122 பேர் ஒன்று திரண்டு, பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து பேரணியாக திரண்டு வந்து, ஸ்டேட் பாங்க் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 26 பெண்கள் உள்பட 71 பேர் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

வேப்பந்தட்டை:
இதேபோல் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் வேப்பந்தட்டை வட்ட செயலாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வேப்பந்தட்டை வட்டக்குழு மற்றும் கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள் விஜயகுமார், பாரதி, அறிவழகன், சக்திவேல் அழகேசன், மூக்கன் சதீஷ் உள்ளிட்ட 98 பேர் ஒன்று திரண்டு பேரணியாக சென்று, வேப்பந்தட்டை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் 16 பெண்கள் உள்பட 58 பேரை அரும்பாவூர் போலீசார் கைது செய்தனர். இதன்படி பெரம்பலூர், வேப்பந்தட்டை தாலுகாக்களில் 2 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில், மொத்தம் 129பேர் கைது செய்யப்பட்டனர்.

பாடலூர்:
ஆலத்தூர் தாலுகா பாடாலூர் தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் செல்லதுரை, கிளை செயலாளர்கள் ராணி, தனலட்சுமி, வெள்ளையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாதர் சங்க மாவட்ட தலைவர் மகேஸ்வரி, தீண்டாமை ஒழிப்பு மாவட்ட தலைவர் பாஸ்கர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் குமார், வட்டக் குழு உறுப்பினர்கள் சின்னசாமி, பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

The post பெரம்பலூர், வேப்பந்தட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist-Communist ,Perambalur ,Veppanthattai ,Union Government ,Marxist Communist Party ,
× RELATED இஸ்ரேலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்