×

ஆவாரம் பூ கூட்டு

தேவையான பொருட்கள்

ஆவாரம் பூ – அரை கிண்ணம்
கடலைப்பருப்பு – அரை கிண்ணம்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க

எண்ணெய் – 1 குழிக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – அரை தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – 1.

செய்முறை:

ஆவாரம் பூவை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், குக்கரில் கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். பின்னர், வேக வைத்த கடலைப்பருப்புடன் ஆவாரம் பூ, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவிடவும். பூ வெந்ததும் இறக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து கூட்டில் சேர்க்கவும். சுவையான ஆவாரம் பூ கூட்டு தயார்.

The post ஆவாரம் பூ கூட்டு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...