×

மேட்டுப்பாளையம் பவானியாற்றில் செந்நிறமாக ஓடும் தண்ணீர்

மேட்டுப்பாளையம், செப்.6: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. அண்டை மாநிலமான கேரள மற்றும் நீலகிரியில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி,குந்தா, கெத்தை,பரளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கேரள மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் மழைக்காலம் என்பதால் செந்நிறமாக ஓடி வருகிறது.

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் விஜய் கூறுகையில் மழைக்காலம் என்பதால் டெங்கு உள்ளிட்ட பருவ கால நோய்கள் பரவி வருகின்றன.இதனை கட்டுப்படுத்த குடிநீரை காய்ச்சி,வடிகட்டி குடிக்க வேண்டும்.மேலும், டெங்கு காய்ச்சல் பரவாத வண்ணம் வீட்டின் சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.வீட்டில் தேவையில்லாத டயர்கள்,ஆட்டுக்கல்,தேங்காய் சிரட்டை உள்ளிட்டவற்றில் மழை நீர் தேங்கும் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

The post மேட்டுப்பாளையம் பவானியாற்றில் செந்நிறமாக ஓடும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Madtupalam ,Bavaniyadu ,Mettupalayam ,Billur Dam Coe ,Madtupalayam ,Tiruppur district ,Maduthubalam ,
× RELATED பள்ளி சிறுவர்களுக்கான தடகள போட்டி...