×

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னையில் 7ம் தேதி ஆர்ப்பாட்டம்: ஏஐடியுசி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் எம்.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊதிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்க வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் மாற்றியமைக்க ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியின்படி 2003ம் ஏப்.1ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்குதல், 94 மாதங்கள் நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயர்வை ஓய்வூதிய விதிகளின்படி உடனே வழங்குதல், ஊதிய ஒப்பந்தங்களில் ஏற்றுக்கொண்டபடி ஓய்வூதிய நிதி பற்றாக்குறையை அரசும், நிர்வாகங்களும் பொறுப்பேற்று வழங்குதல், கல்வி தகுதிக்கு ஏற்ப வாரிசுகளுக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை பல்லவன் சாலையில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

The post ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னையில் 7ம் தேதி ஆர்ப்பாட்டம்: ஏஐடியுசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Retired transport workers ,Chennai ,AITUC ,Tamil Nadu Government Transport Corporation Workers Federation ,president ,M. Arumugam ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...