×

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாளான வரும் 11ம்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் உதயகுமார், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன்னாள் அமைப்பு செயலாளர் நிறைகுளத்தான், புரட்சி தலைவி பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முத்தையா உள்ளிட்ட நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி சிறப்பான முறையில் செய்ய கேட்டுக் கொள்கிறேன். நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த கேட்டுக் கொள்கிறேன்.

The post இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Emmanuel Sekaran ,Edappadi Palaniswami ,Chennai ,Emmanuel Shekaran ,
× RELATED தொடர் தோல்விகளால் அதிருப்தி எடப்பாடி...