×

மணிப்பூரில் வன்முறையை ஒடுக்க மூத்த காவல் கண்காணிப்பாளராக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நியமனம்

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி குக்கி, மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் வன்முறையாக வெடித்ததில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது 4 மாதங்கள் கடந்த நிலையிலும், நியூ லிம்புலேன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குக்கி இனத்தவர்கள் வலுக்கட்டாயமாக காங்போக்பி மாவட்டத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூரில் நடக்கும் இனக்கலவரத்தை ஒடுக்க, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, அதிரடி வேட்டையில் மியான்மரில் இருந்து வந்த தீவிரவாதிகளை அடக்கிய, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நெக்டர் சஞ்சென்பம் என்பவரை மூத்த காவல் கண்காணிப்பாளர் (போர்) ஆக அம்மாநில அரசு நியமித்துள்ளது. இப்பதவி இவருக்காகவே உருவாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் கடந்த 2015ம் ஆண்டில் மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் 18 ராணுவத்தினரை மியான்மர் தீவிரவாதிகள் கொன்றதற்கு, பதிலடியாக மியான்மருக்குள் நுழைந்து அவர்களின் முகாம்களை அழித்தவர். முன்கூட்டியே ஓய்வு பெற்ற இவர் கீர்த்தி சக்ரா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மணிப்பூரில் வன்முறையை ஒடுக்க மூத்த காவல் கண்காணிப்பாளராக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Retired army ,Manipur Imphal ,Kuki ,Meithi ,Manipur ,Army ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கிராம...