×
Saravana Stores

கடம்பத்தூர் ஸ்ரீதேவிகுப்பம் கிராமத்தில் வங்கி மேலாளருக்கு சரமாரி கத்திக்குத்து: 4 பேருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் பிரதீப்குமார்(36). இவர் சென்னை எம்என்சி வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது நண்பர்களுடன் ஸ்ரீதேவிகுப்பம் பெட்ரோல் பங்க் அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது மழை பெய்யவே மைதானம் ஓரமாக தனது நண்பர்களுடன் பிரதீப்குமார் நின்றிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஏகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுனால் (எ) கோட்டீஸ்வரன், அருண் (எ)சாலமன், மற்றும் சுபாஷ் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக தலையில் வெட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் எனக்கூறியவாறு 4 பேரும் தலை, முதுகு, கை, கால் என மாறி மாறி குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து பலத்த காயம் அடைந்த பிரதீப்குமாரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடம்பத்தூர் போலீசில் பிரதீப் குமார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து கொலைவெறி தாக்குதல் நடத்திய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

The post கடம்பத்தூர் ஸ்ரீதேவிகுப்பம் கிராமத்தில் வங்கி மேலாளருக்கு சரமாரி கத்திக்குத்து: 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Sridevikuppam village ,Kadampathur ,Thiruvallur ,Gajendran ,Pradeep Kumar ,Venmanambudur village ,Kadambathur ,Chennai ,MNC bank ,Kadambatur Sridevikuppam ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை