×

போடி நகராட்சியில் அனுமதியின்றி வீடு கட்டினால் நடவடிக்கை: நகரமைப்பு கூட்டத்தில் முடிவு

 

போடி, செப். 4: போடியில் கட்டுமான பணிகளை முறைப்படுத்தும் ஆலோசனைக் கூட்டம் நகரமைப்பு ஆய்வாளர் சுகதேவ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கொத்தனார் சங்கத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணி வரவேற்றார். இதில், நகர கொத்தனார் சங்க நிர்வாகிகள், பொறியாளர்கள், கொத்தனார்கள் என 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கட்டிட அமைப்புகளில் நகராட்சி சட்ட விதிகளை கையாளும் விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

போடி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள், சாலைகள், தெருக்கள், கால்வாய்களில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. வீடு கட்டும் உரிமையாளர்கள், கட்டிட வரைவாளர்கள், இன்ஜினியர்கள் முறையான ஆவணங்களுடன் தகுந்த வரைபடங்களுடன் முன் அனுமதி பெற்ற பிறகே கட்டிடம் கட்ட வேண்டும். அப்படி மீறி கட்டும் கட்டிட உரிமையாளர்கள் மீதும், சம்மந்தப்பட்ட பொறியாளர் மீதும் சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொறியாளர்களின் நகராட்சி லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

The post போடி நகராட்சியில் அனுமதியின்றி வீடு கட்டினால் நடவடிக்கை: நகரமைப்பு கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Sugadev ,
× RELATED காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை: போடியில் 6 கடைகளுக்கு அபராதம்