×

இம்பாலில் இருந்து 10 குக்கி குடும்பங்கள் வலுக்கட்டாயமாக வௌியேற்றம்: போலீஸ் நடவடிக்கையால் சர்ச்சை

இம்பால்: மணிப்பூரில் கடந்த மே மாதம் துவங்கிய கலவரம் இன்னமும் ஓயவில்லை. இன்னமும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. வன்முறை காரணமாக தலைநகர் இம்பாலின் நியூ லம்புலேன் பகுதியில் வசித்து வந்த 300 குக்கி இன குடும்பங்கள் அந்த இடத்தை விட்டு வௌியேறி விட்டனர். இந்நிலையில் அங்கு மீதமிருந்த 24 பேர் அடங்கிய 10 குக்கி இன குடும்பத்தினர் வலுகட்டாயமாக வெளியேற்றபபட்டு குக்கி ஆதிக்கம் நிறைந்த காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மோட்பங் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து குக்கி இன மக்கள் கூறியதாவது, “பல ஆண்டுகளாக நியூ லம்புலேன் பகுதியில் வசித்து வருகிறோம். மாநில உள்துறை அறிவுறுத்தலின்படி ஆயுதம் தாங்கிய சீருடை அணிந்த காவல்துறையினர் செப்டம்பர் 1,2 தேதிகளில் இரவு நேரத்தில் வந்து இங்கிருந்தால் பாதுகாப்பு இல்லை என கூறி, எங்களை வலுக்கட்டாயமாக வௌியேற்றினர். நாங்கள் வீட்டில் வைத்திருந்த பொருட்களை எடுக்க கூட நேரம் தரவில்லை. கட்டிய ஆடையுடன் சென்று விட்டோம்” என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

தனியாக பிரித்து விட கோரிக்கை: வலுக்கட்டாய வௌிேயேற்றத்தால் குக்கி இன மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து குக்கி பழங்குடியினரின் குக்கி இன்பி மணிப்பூர் வௌியிட்டுள்ள அறிக்கையில், “குக்கியும், மெய்டீஸ் சமூகத்தினரும் ஏற்கனவே பிரிந்து உள்ளோம். அரசியலமைப்பு ரீதியாக இந்த பிரிவை அங்கீகரிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.

The post இம்பாலில் இருந்து 10 குக்கி குடும்பங்கள் வலுக்கட்டாயமாக வௌியேற்றம்: போலீஸ் நடவடிக்கையால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Kuki ,Imphal ,Manipur ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கிராம...