கோவை, செப். 3: கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வரும் 07.09.2023 (வியாழன்) அன்று காலை 9.30 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில், புதிதாக கடன் பெறவும், ஏற்கனவே கொரோனா காலக்கட்டத்தில் கடனுக்காக விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகள், முதல் மற்றும் இரண்டாம் தவணை பெற்ற வியாபாரிகள் என அனைவரும் பங்கேற்கலாம். ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் இதர ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கமிஷனர் கூறியுள்ளார்.
The post சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் appeared first on Dinakaran.
