×

நகராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கைதொழிலாளியை அரிவாளால் வெட்டிகொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

மேட்டுப்பாளையம், செப்.3: மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் ரோட்டை சேர்ந்த ராமு என்பவரது மகன் கந்தவேல் (30). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் இரண்டாவது எதிரியாக உள்ளார். இரட்டை கொலை வழக்கில் இறந்த வர்ஷினி பிரியாவின் சகோதரர் சச்சின் (எ) நவீன்குமார் (18). இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியன்று கந்தவேலுவை முன்விரோதம் காரணமாக சச்சின் (எ) நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் திலீப் (18), விபின் பிரசாத் (18), கவின் (18) மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேரும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்றனர். இதில் அவர் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீசார் திலீப், விபின் பிரசாத், சச்சின்(எ) நவீன்குமார் மற்றும் சிறுவன் உட்பட நால்வரை கடந்த 27ம் தேதி கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய கவின் (18) என்பவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிறுமுகை செல்லும் சாலையில் போலீசாரின் வாகன சோதனையில் கவின் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

The post நகராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கைதொழிலாளியை அரிவாளால் வெட்டிகொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Kandavel ,Ramu ,Vellipalayam Road, Mettupalayam ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம்