ஈரோடு, செப். 3: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதில், கடந்த 4 நாட்களாக ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் கழிவு நீர் சாக்கடைகளில் மழை நீர் நிரம்பி, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதில், மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 69.20 மில்லி மீட்டர் மழை பெய்தது.
இதேபோல், ஈரோட்டில் 5 மில்லி மீட்டரும், பவானியில் 4 மில்லி மீட்டரும், பெருந்துறையில் 26 மில்லி மீட்டரும், நம்பியூரில் 1 மில்லி மீட்டரும், கவுந்தப்பாடியில் 4.80 மில்லி மீட்டரும், சென்னிமலையில் 27.40 மில்லி மீட்டரும், பவானிசாகரில் 1 மில்லி மீட்டரும், கொடிவேரியில் 1 மில்லி மீட்டரும், வரட்டுப்பள்ளத்தில் 19.40 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் 185.80 மில்லி மீட்டர் மழை பொழிந்தது.
The post தண்ணீர் திறப்பது குறைப்புமாவட்டத்தில்185.80 மிமீ பதிவு appeared first on Dinakaran.
