×

பள்ளி மாணவிகளுக்கு குழந்தை உரிமை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

திருச்சி, செப்.3: லால்குடி எல்.என்.பி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி லால்குடி நகராட்சி தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் நளினா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட குழந்தை நல குழு உறுப்பினர் முனைவர் பிரபு கலந்து கொண்டு, குழந்தை திருமணத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் அளவிலான மன அளவிலான பிரச்னைகள் குழந்தை திருமண தடைச்சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் தொடர்பான சட்டங்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்தும் பேசினார். லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கார்த்திகேயாயினி, லால்குடி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி, லால்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கல்வியின் அவசியம், சுகாதாரம், ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு வழங்கினார். 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post பள்ளி மாணவிகளுக்கு குழந்தை உரிமை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Lalgudi LNP Girls High School ,Dinakaran ,
× RELATED லாட்டரி விற்றவர் கைது