×

ரூ.22 ஆயிரம் அபராதம் வசூல்

விருதுநகர், செப்.2: விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி, எட்டூர்வட்டம், ஆர்.ஆர்.நகர், பட்டம்புதூர், மருளுத்து பகுதி கிராமங்களில் உள்ள கடைகளில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ், விருதுநகர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அம்ஜத் இப்ராஹிம் ஆய்வு மேற்கொண்டனர். 22 கடைகளில் நடைபெற்ற ஆய்வில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பாலித்தீன் பைகளை பயன்பாடு மற்றும் விற்பனைக்கு 10 கடைகளில் வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து 10 கடைகளுக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். மேலும் கடைக்காரர்களிடம் தடை செய்யப்பட்ட பாலித்தீன் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

The post ரூ.22 ஆயிரம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar District ,Vachakkarapatti ,Etturvattam ,R.R. Nagar ,Pattambudur ,Maruluthu ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...