×

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்50 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருச்சி, செப். 1: திருச்சி மத்திய பஸ் நிலையப் பகுதியில் பொதுமக்களுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 50 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சாலை மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து புகார்கள் கூறப்பட்டது . இதையடுத்து கலெக்டர் பிரதீப்குமார் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார் . இதற்கிடையில், மாநகராட்சி மேயர் அன்பழகன் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம், இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன், சுகாதார ஆய்வாளர் பிரின்ஸ் சகாயராஜ் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு மற்றும் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் உதவியுடன் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் உள்பகுதி, , வில்லியம்ஸ் ரோடு, பாரதிதாசன் ரோடு, ராக்கின்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து உள்ள கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்காக 2 பொக்லைன் எந்திரம், லாரிகள் உதவியுடன் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது அங்கு வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்50 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Trichy Central Bus Station ,Trichy ,Dinakaran ,
× RELATED லாட்டரி விற்றவர் கைது