×

சத்தரை, பூண்டி ஆகிய இடங்களில் 12 சவரன் நகை துணிகர வழிப்பறி: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி விஜயலட்சுமி(42). இவர் பூண்டி ஒன்றியம், வெள்ளாத்துக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 29ம் தேதி மாலை வழக்கம் போல் பள்ளி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவள்ளூர் – பூண்டி சாலையில் புதூர் மீன் விதைப் பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு மற்றும் டாலர் செயின் என ஏழு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். ஆசிரியை விஜயலஷ்மி கூச்சலிட்டும் அப்போது அவ்வழியாக யாரும் செல்லாததால் ஹெல்மெட் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

மற்றொரு சம்பவம்: அதேபோல் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்தரை சாய் ரித்விக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி பூங்கோதை (34). இவர் இருளஞ்சேரியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தனது மகன் இளவரசன்(10)மகள் சஞ்சனா(8) ஆகியோரை வீட்டில் இருந்து அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி பேரம்பாக்கத்தில் இருந்து சத்தரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.வீட்டிற்கு வரும் பொழுது சலோமி யூனிட் என்ற பேனா கம்பெனி அருகே ஆர்15 நீல நிற யமாஹா இருசக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் அமர்ந்திருப்பவர் மாஸ்க் அணிந்திருந்த இருவரும் பின் தொடர்ந்து வந்து பூங்கோதை அணிந்திருந்த 5 சவரன் தங்கச் செயின் மற்றும் அரை சவரன் கொண்ட சிலுவை டாலர் ஆகியவற்றை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post சத்தரை, பூண்டி ஆகிய இடங்களில் 12 சவரன் நகை துணிகர வழிப்பறி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chattrai ,Bundi ,Tiruvallur ,Srinivasan ,Park Nagar ,Vijayalakshmi ,Poondi Union ,Vellathukottai ,Sawaran ,Chattrai, Poondi ,Dinakaran ,
× RELATED ₹9.48 கோடி மதிப்பீட்டில் பூண்டி...