×

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு..!!

பெங்களூரு: கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 6,398 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 9,279 கனஅடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 7,279 கனஅடி நீரும், கபினியில் இருந்து 2,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

The post கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kabini ,Karnataka ,Tamil Nadu ,Bengaluru ,K.K. R.R. ,K. R.R. ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...