ஈரோடு, ஆக. 30: ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள பழனிபுரம், பவானி ஆற்றின் கரையோரம் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக பவானி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த சரவணன் (41), பவானி, கல்தொழிலாளர் முதல் வீதியை சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய இருவரும், பணம் பந்தயம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் 2 சேவல்கள், பணம் ரூ. 500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
The post சேவல் சண்டை: இருவர் கைது appeared first on Dinakaran.
