×

பாஜ நிர்வாகி மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை: மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்

கும்பகோணம்: கும்பகோணத்தில் பாஜ நிர்வாகியின் மருத்துவமனையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருமாந்துறையை சேர்ந்தவர் வைஷ்ணவி (23). கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள பாஜ மாநில சிந்தனையாளர் பிரிவு துணைத்தலைவர் கார்த்திகேயனின் ‘பாமா சுப்ரமணியன் நினைவு மருத்துவமனை’யில் கடந்த சில மாதங்களாக நர்சாக பணியாற்றி வந்தார்.

நேற்று வழக்கம்போல் பணியில் இருந்த வைஷ்ணவி, திடீரென மருத்துவமனையின் 3வது தளத்தில் உள்ள ஓய்வறைக்கு சென்று அங்கிருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து கும்பகோணம் மேற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். வைஷ்ணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வைஷ்ணவிக்கு பிரச்னை எதுவும் இல்லை.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கதறி அழுதனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

The post பாஜ நிர்வாகி மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை: மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kumbakonam ,Thanjavur district ,Tirumanturai ,Tiruvidaimarudur ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!