- TTV
- தின மலர்
- முதல் அமைச்சர்
- ஓ. பன்னீர்செல்வம்
- சென்னை
- AMMK
- பொதுச்செயலர்
- அனைத்து இந்தியாவும்
- அண்ணா திராவிட முன்னேத்ரா
- கஜாகம்
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும்,
சகோதரருமாகிய ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

