×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!!

கள்ளக்குறிச்சி: பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வரம் தோறும் புதன்கிழமையில் ஆடு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று சிறப்பு ஆடு சந்தை நடைபெற்றது. இந்த ஆட்டு சந்தையில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆடு வளர்ப்போர் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனை வாங்குவதற்காக சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் அதிகாலை முதலே ஆட்டு சந்தையில் குவிந்து தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கி சென்றனர். இன்று ஒரு ஆட்டின் விலை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையில் விற்பனை நடைபெற்றது. அதிகாலை முதலே பரபரப்பாக ஆடு சந்தை நடைபெற்று விற்பனையில் ரூ.2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆடு சந்தையில் ஏராளமானோர் வந்து தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கி சென்று உள்ளனர். இதனால் உளுந்தூர்பேட்டை, திருச்சி சாலையில் காலை முதலே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வியாபாரம் நடைபெற்று வருகிறது.

Tags : Ulundurpett ,Pongal festival ,Kallakurichi ,Pongal ,Ulundurpett, Kallakurichi district ,
× RELATED பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென்...