×

ஆசிலாபுரத்தில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை: பூமிபூஜையுடன் பணிகள் துவக்கம்

ராஜபாளையம், ஆக.29: ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தில் இருந்து சோழபுரம் பழைய ரயில் நிலையம் வரை உள்ள சாலை சேதமாகி இருந்தது. இதனை புதுப்பிக்க கோரி பொது மக்கள் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட நெடுஞ்சாலை துறை சார்பில், ஊராட்சி சாலையை
மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் திட்டமான நபார்டு மற்றும் கிராம சாலை அலகின் மூலம் 2022- 2023ம் நிதி ஆண்டில் ரூ.52 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் படி ஏற்கெனவே இருந்த 3 மீட்டர் அகல சாலையானது தற்போது 3.75 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு 720 மீட்டர் தூரத்திற்கு புதியதாக அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கப்பட்டது.சாலை அமைக்கும் பணிகளை சாத்தூர் எம்எல்ஏ டாக்டர் ரகுராமன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

The post ஆசிலாபுரத்தில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை: பூமிபூஜையுடன் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Asilapuram ,Bhumi Puja ,Rajapalayam ,Bhoomipuja ,
× RELATED ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்