பவானி, ஆக.28: மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுத்து, அமைதி ஏற்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து பவானி வட்டார சிறுபான்மை அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அந்தியூர் மேட்டூர் பிரிவில் நேற்று நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு பவானி சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலய ஆயர் ஜெ.விக்டர்ராஜ், இயேசுவின் ஆறுதல் சபை போதகர் எஸ்.அற்புதராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்.சீயோன் சத்தம் ஊழியங்கள் போதகர் சிஸ்வா ஜேம்ஸ் முன்னிலை வகித்தார்.
ஈரோடு ஆர்ஜிஎம் ஊழியங்கள் பேராயர் ஜான் விஸ்வநாதன், எஸ்பிசி மாநில துணைச் செயலாளர் ஜோடேவிட், மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் ஜைனுல் ஆபிதீன், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில செயலாளர் அப்துல் காதர் மாண்பா ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளைத் தடுக்க வேண்டும்.தேவாலயங்கள்,மசூதிகள்,வீடுகள் இடிக்கப்பட்டு,தீ வைத்து கொளுத்தப்படுவதை தடுக்க வேண்டும். மணிப்பூரில் நடக்கும் இன அழிப்பின் கொடூர செயல்களை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசையும், மணிப்பூர் மாநில பாஜக அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று மனித குலத்திற்கும், இந்திய தேசத்துக்கும் சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமுமுக தொண்டரணி மாநில செயலாளர் முகம்மது,சிஎஸ்ஐ தேவாலய ஆயர்கள் எஸ்.இம்மானுவேல் ராஜ், ஆர்.கபில்,போதகர்கள் டேவிட் சின்னசாமி,பாபு தம்புராஜ்,சாமுவேல் ராஜ்,டேனியல்,சங்கர் டேனியல், ராஜன்பாபு, சார்லஸ் ஆரோக்கியராஜ், ஆர்.இம்மானுவேல்,சௌந்தரராஜ்,கோபிநாத்,ஜெயசிங்,ஜீவானந்த கிருபாகரன்,ஸ்டீபன் எபினேசர்,வில்சன் புருஸ்,சாமுவேல்,பிரபு,மேஷாக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மணிப்பூர் விவகாரம் சிறுபான்மை அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
