×

வனத்துறை அமைச்சருக்கு நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் வரவேற்பு

 

மதுக்கரை, ஆக.27: நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் கொடநாடு பொன்தோஸ் வரவேற்றார். நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் மதிவேந்தனை விமான நிலையத்திற்கு வந்து நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவரும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான கொடநாடு பொன்தோஸ் வரவேற்றார். அப்போது அவருடன் கோவை மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் ஜார்ஜ், அமைப்பாளர் டெம்போ சிவா(எ) சிவராஜ்,

துணை அமைப்பாளர்கள் ராஜன், சரவணன், ரவிச்சந்திரன். முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தென்னை சிவா, சீரபாளையம் செந்தில், நாமக்கல் சத்தியபாபு, முருதமலை அறங்காவல் குழு தலைவர் மருதமலை மகேஸ்வரன் தகவல் தொழில் நுட்ப அணி செந்தில்குமார், இளைஞரணி இம்ரான் ஜீவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post வனத்துறை அமைச்சருக்கு நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri District ,Panchayat ,President ,Forest Minister ,Madhukarai ,Mathivendana Nilgiri ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது