×

கிணத்துக்கடவு ஊராட்சியில் காலை உணவு திட்டம் துவக்கம்

 

கிணத்துக்கடவு, ஆக.26: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இரண்டாம் கட்ட காலை உணவு திட்டத்தை பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் மற்றும் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து காலை உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்த அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர். பின்னர் மாணவர்களுக்கு உணவு பறிமாறினர்.

இதில், பேரூராட்சி தலைவர் கதிர்வேல், நகர செயலாளர் கனகராஜ், பள்ளி தலைமையாசியை கண்ணம்மாள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதேபோன்று கிணத்துக்கடவு ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் ஜோகராபானு அல்தாப்உசேன், துணைத்தலைவர் பாமா சண்முகசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

The post கிணத்துக்கடவு ஊராட்சியில் காலை உணவு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Kinathukadavu panchayat ,Kinathukadavu ,Coimbatore District Kinathukadavu Panchayat Union Primary School ,
× RELATED கோவை மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது