×

சென்னை காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் 80 வயது மூத்த குடிமகனின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்த காவல் துணை ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையாளர் 80 வயது மூத்த குடிமகனின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை நகரில் வசிக்கும் மூத்த குடிமக்களின் குறைகளை, சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புகார்தாரர் திரு.ஏ.கே.மணி/80, த/பெ.குஞ்சுண்ணி. எண் 34., ராமகிருஷ்ணா தெரு, டி.ஜி. வில்லா, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93 என்பவர் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் கடந்த 2009 ம் ஆண்டு போரூரில் 40 சென்ட் நிலத்தை ரூ.2 கோடிக்கு வாங்குவதற்காக கோபாலகிருஷ்ணன்/83 (எதிர் மனுதாரர்) ஒருவருடன் ஒப்பந்தம் செய்து முன்பணமாக ரூ.25,00,000/-. கொடுத்ததாகவும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புகார்தாரர் அந்த நிலம், 2004ல், ஏற்கனவே ஒருவருக்கு விற்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து புகார்தாரர், ஏ.கே.மணி எதிரி கோபாலகிருஷ்ணனிடம், நிலம் குறித்து கேட்டபோது, வாங்கிய முன்பணத்திற்கு வட்டியுடன் திருப்பி தருவதாக, கூறினார். ஆனால் பேசிய படி கோபாலகிருஷ்ணன் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேற்று (23.08.2023) கோயம்பேடு காவல் துணை ஆணையாளரை அனுப்பி மேற்படி மூத்த குடிமகன் திரு.ஏ.கேமணி அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்து முதியவரின் குறையை தீர்த்து வைக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் கோயம்பேடு துணை ஆணையாளர் திருமதி.G.உமையாள் அவர்களின் தலைமையில் காவல் குழுவினர் மேற்படி முதியவர் A.K.மணி அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்த போது, மேற்படி வழக்கு தொடர்பாக ஆவடி, காவல் ஆணையரகம், SRMC காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், மேற்படி புகார் தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

வழக்கு சிவில் சம்பந்தப்பட்டது என்பதால், முதியவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை சட்டப்படி அணுகி நிவாரணம் பெற அறிவுறுத்தப்பட்டார். அதன்பேரில் முதியவர் ஏ.கே.மணி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் மேற்படி மூதியவரின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்து குறைகளை கேட்டறிந்த சென்னை பெருநகர காவல் துறையினரின் அணுகுமுறையை முதியவர் ஏ.கே.மணி மற்றும் அவரது மனைவி மனதார பாராட்டி நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

The post சென்னை காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் 80 வயது மூத்த குடிமகனின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்த காவல் துணை ஆணையாளர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Police Commissioner ,Deputy Commissioner of Police ,Chennai Metropolitan ,Commissioner ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...